புதன், மார்ச் 9

கவிதை

இதமான இளவேனிற் காலம் இதயங்கள் மகிழ்வில் இனிதான ஒருநாள் இன்று அழகான பனிகூட்டில் அதிகாலை சங்கமங்கள் அவள் நோக்கி அவனும் அவன் நோக்கிஅவளும் அலை பாய பரிமாறும் கண் அசைவுகள் புரியாத மொழிபேசி மனதளவில் சிறகடிக்கும் இரு பறவைகளை தரிசனங்கள் கண்பதே விடியல்களுக்கு வேலை அனுபவித்த உள்ளங்களும் அனுபவிக்கும் உள்ளங்களும் மறைக்க நினைத்தும் பொங்கி எழும் பெருவிழா என்று உலகம் சொல்கிறது நான் உணர்ந்து சொல்கிறேன் இனிய #காதலர்தின வாழ்த்துக்கள்

மலரே.... நீ

கரையோர காகித பூ கண் சிமிட்டி கனா காணுதே அழகான ஒரு விடியலில் ஆசை கூடிய ஆணவத்தால் வழிபோக்கனாய் வந்தவனிடம் தன்னை பறித்து ஆலமர தின்னையில் இருக்கும் ஆண்டவனிடம் கொண்டு சேர் என்றது வாசனை அறியா மலரே வாட குணம் உன்னில் உண்டு ஆனாலும் மாலையில் சூட தகுதி இல்லை என்றவன் கண்மறைந்து தூரம் சென்றான் மலராக இருந்தாலும் சேரும் இடம் பொறுத்தே மதிப்பு