கரையோர காகித பூ
கண் சிமிட்டி
கனா காணுதே
அழகான
ஒரு விடியலில்
ஆசை கூடிய
ஆணவத்தால்
வழிபோக்கனாய்
வந்தவனிடம்
தன்னை பறித்து
ஆலமர
தின்னையில் இருக்கும்
ஆண்டவனிடம்
கொண்டு சேர் என்றது
வாசனை அறியா
மலரே வாட குணம்
உன்னில் உண்டு
ஆனாலும்
மாலையில் சூட
தகுதி இல்லை
என்றவன்
கண்மறைந்து
தூரம் சென்றான்
மலராக இருந்தாலும்
சேரும் இடம் பொறுத்தே
மதிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக