வெள்ளி, பிப்ரவரி 9
பெருங் கூட்டத் தனிமை
நாளொன்றில்
நான் கண்ட கனவுகளை
பெருங்கூட்ட தனிமையில்
தேடினேன்
இளைப்பாற இடம் இல்லா
தனிமனித வாழ்க்கை
ஆயிரம் உறவுகளின்
துணையிருந்தும்
வெறுமைதான்
வழி தெரிந்த குருடனாய்
இன்றும் பயணிப்பதை
வாய் தவறியும்
சொல்வதிற்கில்லை
அது தலை எழுத்தில்
இணைக்கப்பட்ட
சாசனமோ..!
சந்தேகமுண்டு எனக்கு
பேச்சில் இனிமையும்
எழுத்தில் சுவையையும்
கருத்தில் நேர்மையும்
கைக்குள் இருக்கும்
என் வெற்றியின்
திறவுகோல்
இன்னும் கிடைத்தபாடில்லை
தேடலும் நின்றபாடில்லை
எல்லோரையும்
அசைத்துப்பார்க்கும்
அந்த இனியதொரு
நாள்
எப்போது காண்பது
வியாழன், பிப்ரவரி 8
வானத்து முழு.....
வானத்து முழுமதியே
வாசல் வந்து
வஞ்சியின் மலர் முகம்
வீசும் ஒளியில்
வியந்தே போனது
காற்றலையில்
கலந்திடத்தான்
வாசமல்லி தலை சூட
நேசமுடன் என் பார்வை
அவள் பின்னே
பயணித்தது
கருமேக சூழலிலே
கண் தெரிந்த வானவில்லும்
என் முன்னே
அவளை தொட்டது
நானறிந்த எழுத்துகளில்
சிலவற்றை கோர்தெடுத்து
கவிமாலை சூட்டிடவே
ஒரு முறை
கண்பார்த்தால்
பாக்கியமே...!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)