arul neyveli
வெள்ளி, பிப்ரவரி 9
பெருங் கூட்டத் தனிமை
வியாழன், பிப்ரவரி 8
வானத்து முழு.....
புதன், மார்ச் 9
கவிதை
மலரே.... நீ
செவ்வாய், ஆகஸ்ட் 10
சாரல்
சாரல்
******
சொல்லிகொடுத்து வருவதா
சொந்தம்
சொல்லாமலே
வந்ததால் இந்த
பந்தம்
பாச மழை வீசுகையில்
ஒசை ஒன்றை கேள்
கவி பாடும்
இடியின் இசையோடு
எட்டி நின்று
ஏன் வேடிக்கை
ஒட்டி நின்று
உறவாடலாமே
ஆசை மறைக்க
ஆளங்கட்டி விழவேண்டுமோ
தோகையிருந்தால்
விரித்தாடலாமே
வண்ணமயிலாய்
விடியும் வரை
இப்படித்தான்
என் கற்பனை
கதவு திறந்து
மழையில்
நனையுது
இதமான சாரலில்
********அருள்********
விடை தெரியாத விழிகள்
விடை தெரியா விழிகள்
************************
சிறைபட்ட சின்ன
விழிகள்
விடுதலை கேட்குதே
விடைஇல்லா
வினாவாக
விவரம் அறிந்த
விளைவுகள்
ஒன்றா இரண்டா
ஓடியகாலம் ஈரெட்டாய்
இருந்த பந்தம்
கண்மறைய
குளமாகியது
அவளின் கண்கள்
இருளாகியது
வழிபாதை
ஒளி தேடியே
கலையிழந்த
இன்பம்
என்று வருமோ......
ஏக்கத்தின்
தாக்கம்தான்
என் மனவானில்
மாதிவள்
பார்வையின்
வினாவிற்கு
விடைகாண
தூண்டியது
காலம்கதை சொல்லுமா
இல்லை கவிசொல்லுமா
இல்லை அவள்
விழி வெல்லுமா
காத்திருப்போம்
விரைவில் உலா வரும்
இவள் விழிகளின்
ஒளி கதிர்
நானும் காத்திருக்கேன்